www.manasirsm.com: 02/01/11
click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Tuesday, February 1, 2011

Libre Office மென்பொருள் திறந்த நிலை மென்பொருள் குறித்த கட்டுரை.

நண்பர்களே நம் அனைவரும் விண்டோஸில் வேர்டு, எக்ஸல், பவர் பாய்ண்ட் போன்ற கோப்புகளை திறக்க மற்றும் எடிட் செய்ய வேண்டும் என்றால் நம்மிடம் மைக்ரோசாப்ட் ஆபிஸ் வேண்டும்.   மைக்ரோசாப்ட் ஆபிஸ் எல்லாருமே உபயோகிக்கிறார்கள்.  ஆனால் காசு கொடுத்து வாங்கி அல்ல இணையத்தில் இருந்து திருடியும், இன்னொருவர் வாங்கிய உரிமையை இவர்களும் உபயோகபடுத்திக் கொள்கிறார்கள்.  இவ்வாறு இணையத்தில் இருந்து ட்ரையல் வெர்சன் மற்றும் திருட்டு மென்பொருளை நிறுவுவதால் வைரஸ் மற்றும் நச்சு மென்பொருட்கள் வர வாய்ப்பு உண்டு.  இது மாதிரி திருட்டு மென்பொருளை உபயோகிப்பதை விட திறநத நிலை மென்பொருட்கள் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. 

அதன் வரிசையில் இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள்  லிபர் ஆபிஸ் இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருள்.  இந்த மென்பொருள் இதுவரை பீட்டா என்னும் சோதனை பதிப்பாகவே இருந்து வந்தது.  இப்பொழுது இந்த மென்பொருளின்  சோதனை பதிப்பு முடிந்து Stable என்னும் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த Stable பதிப்பு வெர்சன் Libre Office 3.3.0 என வெளியிடப்பட்டுள்ளது.  இந்த மென்பொருளில் வேர்ட் ப்ரோஸசர், ஸ்ப்ரெட்சீட்,  ப்ரசண்டேசன் மேனேஜர், சார்ட், டைக்ராம் வரையவும் முடியும். ODBC என்னும் டேட்டாபேஸ்களை இணைக்கவும் முடியும் என்பது சிறப்பம்சம்

இந்த மென்பொருள் போர்ட்டபிள் மென்பொருளாகவும் கிடைப்பது என்பது இன்னும் ஒரு சிறப்பம்சம்.  சுட்டி

இந்த மென்பொருள் வழியாக பிடிஎப் கோப்புகளையும் திறக்க முடியும். திறக்க மட்டுமல்ல பிடிஎப் கோப்புகளில் எதை மாற்ற விரும்புகிறீர்களோ அதை எடிட் செய்து மாற்ற முடியும்  என்பது இதன் சிறப்பு.


இந்த மென்பொருளின் ஸ்ப்ரெட் ஷீட்டில் ஒரு மில்லியன் (Row) வரிசை வரை உண்டு.  ஆனால் மைக்ரோசாப்ட் எக்ஸலில் 65000 மட்டுமே உண்டு.


லோட்டஸ் வேர்ட் போன்ற கோப்புகளையும் இந்த மென்பொருளில் சுலபமாக கையாளலாம்.

இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை கோப்பு என்பதால் நீங்கள் ஒரு முறை தரவிறக்கம் செய்து எத்தனை கணினிகளில் வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.  அதே போல் எத்தனை காப்பி வேண்டுமானலும் எடுத்து உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் பயன்படுத்த தரலாம்.  நீங்கள் ஒரு மென்பொருள் வல்லுநராக இருந்தால் உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி நிறைய மாற்றங்கள் செய்து கொள்ளலாம். யாரும் உங்களை கேள்வி கேட்க மாட்டார்கள்.

இந்த மென்பொருள் முப்பது வகை மொழிகளில் கிடைக்கிறது.  இதில் நம் தாய்மொழி தமிழும் அடக்கம் என்பதில் நாம் பெருமைப்படலாம். 

இந்த மென்பொருளை நேரடியாக தரவிறக்காலாம்.   அல்லது டொரண்ட் வழியாகவும்  தரவிறக்கலாம்.  அதற்கான வசதி அந்த வலைத்தளத்திலேயே உண்டு.

லிபேர் ஆபிஸ் மென்பொருள் தரவிறக்க சுட்டி

லிபேர் ஆபிஸ் போர்ட்டபிள் தரவிறக்க சுட்டி

டொரண்டாக தரவிறக்க தரவிறக்கம் அருகிள் ஒரு கட்டம் இருக்கும் Downloading using Bittorrent என்று அதை டிக் செய்தால் போதும்.

இந்த மென்பொருள் நிறுவ உங்களிடம் விண்டோஸ் 2000 (சர்வீஸ் பேக் 4), எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 இருந்தால் போதும்.

பென்டியம் 3 அல்லது அதற்கு மேல் இருந்தால் போதுமானது.  அத்துடன் குறைந்த பட்சம் 256 எம்பி நினைவகம் போதும் 512 எம்பி இருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்படும். ( இப்பொழுதுதான் குறைந்தது 1 ஜிபி நினைவகம் இல்லாத கணினி இல்லையே )


உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது?

நம்ம எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமா facebookபக்கம் திரும்பிகிட்டு இருக்கோம்னு சொல்லலாம். Orkut யில்    நிறைய வசதிகள்  இருந்தாலும்
Facebook  பயன்படுத்துபவர்களுக்கு Orkut  அந்நியமாக படுகிறது.  இந்த பதிவும் Facebook Security ய பத்தியதுதான். ஆமாங்க Facebook என்ற தளத்தை நிறுவிய Mark Zuckerberg's  Fan page யை சமீபத்தில் Hack செஞ்சுருக்காங்க நம்ம  கில்லாடி Hackerகள். நம்ம Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் நாம் எப்படி பார்த்து தெரிந்து கொள்வது என்று பார்போம்.நம்முடைய பல Personal செய்திகளை Facebook தர துவங்கிவிட்டோம்,   இந்நேரத்தில் இதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

முதலில் Facebook.com-------->Account------>Account settings ---->Account security செல்லவும்.

மேலே உள்ளது போல் வந்த Window வில் உங்களது Account எப்பொழுது கடைசியாக பார்க்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியும்.நீங்கள் இல்லாமல் வேறு எந்த பகுதியில் இருந்து யாராவது உள்ளே வந்திருந்தால்,பக்கத்தில் இருக்கும் End Activity என்ற linkயை கிளிக் செய்து விடுங்கள்.மேலும் வேறு யாரவது உங்கள் கணக்கை பயன்படுத்த துவங்கினால் உங்களது email முகவரிக்கோ, அல்லது SMS மூலமாக உங்களுக்கு தகவல் வர மாதிரி செய்யலாம்.Send me a mail,Send me a text message என்ற இடத்தில Tick செய்து விடுங்கள்.வேலை முடிந்தது.