www.manasirsm.com: 01/25/11
click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Tuesday, January 25, 2011

உங்கள் லேப்டாப் திருடப்படாமல் பாதுகாக்க ஒரு அறிய மென்பொருள்.

 

       

                         

       

இந்த கணினி உலகில் நாளுக்கு நாள் வசதிகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நம்முடைய வீட்டில் உள்ள Desktop கணினிகள் திருடப்படுவதை விட லேப்டாப் தான் அதிக அல்வாவு திருடப்படுகிறது ஏனென்றால் பாக்கெட்டில் வைத்து செல்லும் அளவிற்கு கூட தற்போது லேப்டாப்கள் வந்துவிட்டன. இதனால் திருடப்படுவதும் நாளுக்கு நாள் வசதியாகி விட்டது. இந்த பிரச்சினைகளை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள் நமக்கு உதவுகிறது.

மென்பொருளின் பயன்கள்:

  • இந்த மென்பொருள் நம் கணினி திருடப்படும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது.
  • இந்த மென்பொருள்  மிகச்சிறிய அளவே உடையது (968kb). 
  • இதில் Theft alarm மட்டுமின்றி Battery Alarm உள்ளது. இது நம் லேப்டாப்பின் பேட்டரி குறைந்தால் நமக்கு தெரிய படுத்துகிறது.
  • இதில் உள்ள மற்றொரு சேவையானது health Alarm. இந்த வசதி நாம் கொடுக்கப்படும் நேர இடைவெளிக்கு ஏற்ப நமக்கு உடலிற்கு ஒய்வு தேவை போன்ற செய்திகளை தரும்.
  • Disk Alarm, Permitter Alarm,  Intention Alarm, Panic alarm போன்றவை இதர பிற வசதிகளாகும். 
  • இவைகள் தேவைபட்டாலும் நீங்கள் Activate செய்து கொள்ளுங்கள்
இன்ஸ்டால் செய்யும் முறை : 

  • இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களக்கு L Alarm57.exe என்ற பைல் வரும் அந்த பைலை இரண்டு முறை கிளிக் செய்யுங்கள்.
  • வரும் விண்டோவில் Run பட்டனை அழுத்துங்கள்.
  • அதற்கு அடுத்து வரும் விண்டோவில் Read Manual என்ற பட்டனை அழுத்தவும். 
  • அதில் இந்த மென்பொருளின் அனைத்து விளக்கங்களும் சிறப்பம்சங்களும் செயல் படுத்தும் முறைகளும் விளக்கமாக கொடுத்து இருப்பார்கள் அதை கண்டிப்பாக பார்த்துகொள்ளவும்.
  • அடுத்து Install என்ற பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் Read Licence Agreement என்பதில் Agree என்று கொடுக்கவும்.
  • அடுத்து உங்களுக்கு Authorization Code கேட்கும். அதில் நீங்கள் எதுவும் கொடுக்காமல் Ok மட்டும் கொடுங்கள்.
  • அவ்வளவு தான் உங்கள் கணினியில் L Alarm இன்ஸ்டால் ஆகி விடும். 
  • உங்கள் கணினியை ஒருமுறை Restart செய்து விடவும்.
பயன் படுத்தும் முறை: 
  • உங்கள் கணினியில் Start - Programs - L Alarm - Options செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.(இதில் நிறைய வசதிகள் உள்ளது அனைத்தையும் விளக்க நேரமில்லாததால் முக்கியமானதை மட்டும் தெரிவிக்கிறேன். முன்பு கூறியது போல் Read manual பகுதிக்கு சென்று அனைத்தையும் பார்த்து கொள்ளவும்).
  • இதில் Sound என்பதை கிளிக் செய்யவும். 
  • அதற்கு பிறகு Browse என்பதை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள .Mp3 (or) .Wav பைலை செலக்ட் செய்யவும்.
  • உங்களுக்கு அது போல பைல்கள் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். Need Sound Files என்ற வசதியை அவர்களே கொடுத்து உள்ளார்கள். அதில் சென்று தரவிறக்கி இங்கு பொருத்துங்கள்.
  • உங்களுக்கு எந்தெந்த எந்தெந்த Alarm தேவை படுகிறதோ அதை பொருத்துங்கள்.
  • கடைசியில் உள்ள Armed என்ற இடத்தில் கண்டிப்பாக ஏதேனும் சவுண்ட் கொடுக்க வேண்டும்.
  • முடிவில் Ok கொடுத்து வெளியில் வந்து விடுங்கள்.
  • இப்பொழுது நீங்கள் கணினியில் இருந்து விலக நேரிட்டால் Windows+L கீயை ஒன்றாக  அழுத்திவிட்டு செல்லவும். 
  • இப்பொழுது யாராவது வந்து இந்த கணினியின் Power கேபிளை பிடுங்கினால் போதும் உடனே உங்கள் கணினி நீங்கள் theft Alarm செலக்ட் செய்த சவுண்டில் அடிக்க துவங்கி விடும்.   

                                   
டுடே லொள்ளு 
Photobucket
யாராவது அந்த Switch கொஞ்சம் ஆப் பண்ணிட்டு போங்களேன்.

ஆன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறிந்து கொள்ள.

நாம் இணையத்தில் உலாவரும் போது நம் கணினியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும். மற்றும் நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது நாம் இணையத்தில் அப்லோட் செய்தாலோ அனைத்தும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல் படும். ஆகவே ஆன்லைனில் நம்  கணினியின் இணைய வேகத்தை எப்படி எளிதாக அறிந்து கொள்ளவது என்று இங்கே காணலாம். இதற்க்கு நிறைய தளங்கள் உள்ளன இன்று நாம் பார்க்க போகு தளம் சிறந்ததாக உள்ளது.
இந்த தளத்திற்கான லிங்க் கீழே உள்ளது. இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். இதில் அங்கு கொடுக்கப்பட்டுள்ள Start Speed Test என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே போதும் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
  • முதலில் கணினியின் டவுன்லோட் செய்யும் வேகம் என்பதை கணக்கிட்டு முடிவை தெரிவிக்கும்.
  • அடுத்து கணினியின் அப்லோட் செய்யும் வேகத்தின் திறனை தெரிவிக்கும். 
  • முடிவின் உங்கள் கணினியின் PING (packet Internet Gropping) அளவை பரிசோதிக்கும்.
  • முடிவின் உங்கள் கணினியின் IP முகவரி மற்றும் நீங்கள் உபயோகிக்கும் பிராட்பேன்டின் நிறுவனத்தின் பெயர் ஆகிய விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கும்.
  • உங்கள் கணினியின் இணைய வேகத்திற்கு ஏற்ப உங்களுக்கு முடிவு வரும். 
  • இதில் உங்கள் முடிவிற்கான லிங்கும் கொடுத்து உள்ளனர்.
  • மேலே உள்ளது என் தளத்திற்கான முடிவு. 
  • இந்த தளத்திற்கு Check Your Internet Speed இந்த லிங்கில் செல்லவும்.

 

செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்ப வேண்டுமா?

தலைப்பை பார்த்தவுடன் என்னடா ஏதோ நம்ம தூத்துக்குடிக்கு அனுப்பறத போல அசால்டா சொல்றானேன்னு நினைக்க வேண்டாம் இது உண்மை தான். அமெரிக்காவின் நாசா அடுத்த ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு செயற்கைகோள் அனுப்ப இருக்கிறார்கள். அதில் உள்ள மைக்ரோசிப்பில் நம்முடைய பெயரையும் இணைத்து அனுப்பவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.
இது வரை இதில் 9 லட்சத்திற்கு மேல் அவர்களின் பெயர்களை இணைத்து உள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 4000 நபர்கள் தங்களின் பெயர்களை இணைத்து உள்ளனர். நாம தான் போக முடியாது நம்முடைய பெயராவது போகட்டுமே.

இதில் நீங்கள் பங்கு கொண்டதற்கு ஆதாரமாக உங்களுக்கு ஒரு எண்ணும் மற்றும் உங்கள் பெயர் பொருந்திய சான்றிதழும் வழங்குகின்றனர்.

  •  சரி நம்ம பேர அனுப்புவோமா அதற்கு முதலில் Send Your Name to Mars இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் நான்கு கட்டங்கள் கொடுக்க பட்டிருக்கும் அதை பூர்த்தி செய்து கீழே உள்ள Submit என்ற அழுத்தவும்.
                           
Submit அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


  அவ்வளவு தான் உங்களுடைய பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்று விட்டது இதற்கு சான்றாக உங்களுக்கு ஒரு சான்றிதழ் தருவார்கள் மேலே வட்டமிட்டுள்ள View and print என்ற லிங்க் அழுத்தி உங்கள் சான்றிதழ் பெற்று கொள்ளுங்கள். 




அவ்வளவு தான் என்ன சந்தோசமா நீங்க போனா என்ன உங்க பெயர் போனா என்ன எல்லாமே ஒண்ணு தான்.(நான் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் இணைத்து விட்டேன்) இதுவும் ஒருவித சந்தோஷம் தானே. 
                                                                               
                                                                    
டுடே லொள்ளு 




போரையே சும்மா போக வேண்டியது தானே என்ன ஏண்டா நோண்டுற?