www.manasirsm.com: 01/30/11
click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Sunday, January 30, 2011

manasirsm@blogspot.com

ணினி வேகமாக துவங்க....

நம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…
வழிமுறைகள்:
1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.
5. கிளிக் "OK", "Apply" & "OK",
6. திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.
7. டபுள் கிளிக் "IDE ATA/ATAPI controllers".
8. "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.
9. "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
10. "Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.
11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க


Computer Device Driver - களைப் பாதுகாக்கDoubleDriver!

altஒரு கணினியை வாங்கும்போது கூடவே ஒரு சீடியும் தருவார்கள். அந்த சீடியில் கணினியில் பொருத்தியுள்ள எல்லா விதமான வன்பொருள்களையும் இயங்க வைக்கும் மென்பொருள்கள் அடங்கியிருக்கும். அதனை (டீவைஸ்) ட்ரைவர் சீடி என்பார்கள்.


alt

டீவைஸ் ட்ரைவர் மென்பொருளானது வன்பொருள் சாதனத்துக்கும் இயங்குதளத்துக்குமிடையில் தொடர்பாடலை உருவாக்கும் ஒரு மத்தியஸ்தராகச் செயற்படுகிறது. ஒவ்வொரு வன்பொருள் சாதனமும் ஒரு டீவைஸ் ட்ரைவர் மென்பொருளைக் கொண்டிருக்கும். . அதன் மூலமாகவே இயங்கு தளம் அந்த சாதனத்தைக் கண்டு கொண்டு அதனை முறையாக இயக்குகிறது.


கணினியில் தேவையான அனைத்து டீவைஸ் ட்ரைவர்க்ளும் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தாலும் ஹாட் டிஸ்கை போமட் செய்து மறுபடி இயங்கு தளத்தை நிறுவ வேண்டிய தேவை ஏற்பட்டால் ஒவ்வொரு சாதனத்துக்குமுரிய டீவைஸ் ட்ரைவரையும் மறுபட்டி நிறுவ வேண்டி இருக்கும். அதனால் எப்போதும் டீவைஸ் ட்ரைவர் சீடியை கவனமாக வைத்திருத்தல் அவசியம்.


ட்ரைவர் சீடி பழுதடைந்து விட்டால் அல்லது அதனைத் தொலைத்து விட்டால் எனன செய்வது? அதேபோன்று பழைய பாவித்த கணினிகளை வாங்கும்போது அனேகமாக அதற்குரிய ட்ரைவர் சிடிக்கள் கிடைப்பதில்லை.

தேவையான டீவைஸ் ட்ரைவரை இணையத்திலிந்து டவுன்லோட் செய்து கொள்ளலாமே என நீங்கள் நினைக்கலாம். இணயத்திலும் இல்லாதபோது ட்ரைவர் சீடியைத் தேடி எங்கே செலவது?

கணினி வன்பொருள் சாதனங்களுக்குத் தேவையான உரிய ட்ரைவர் மென்பொருளைத் தேடிப்பெறுவது எவ்வளவு கடினமான வேலை என்பதை அந்த நிலைமையை எதிர் கொண்டவர்களே அறிவார்கள்.


இது போன்ற ட்ரைவர் மென்பொருள் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருகிறது டபல் ட்ரைவர் (Double Driver) எனும் சிறிய மென்பொருள் கருவி. இந்த டபல் ட்ரைவர் மூலம் உங்கள் கனினியில் நிறுவப்பட்டுள்ள ட்ரைவர் மென்பொருள்கள் அனைத்தையும் தனியாக ஒரு சீடியிலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ பாதுகாப்பாக (Back up) சேமித்துக் கொள்லலாம் ,

டபல் ட்ரைவர் இல்குவான இடை முகப்பைக் கொண்ட ஒரு பயனுள்ள ஒரு இலவ்ச யூட்டிலிட்டி. இதன் மூலம் கணினியில் நிறுவப்பட்டுள்ள ட்ரைவர் மென்பொருளகளைப் பார்வையிடுவதோடு, அவற்றைப் பாதுகாப்பாகவும் சேமிக்கவும், சேமித்ததிலிருந்து மறுபடி ரீஸ்டோர் (restore) செய்யவும் முடிகிறது. .

டபள் ட்ரைவர் யூட்டிலிட்டி கணினியை முழுமையாகப் பரீட்சித்து ட்ரைவர் மென்பொருள்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் எமக்குக் காண்பிக்கிறது. அதனை பேக்கப் செய்து விட்டு தேவையான போது பேக்கப்பிலிருந்து உரிய மென்பொருளை ரீஸ்டோர் செய்து கொள்ளலாம் ;.

விண்டோஸின் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளில் சிறப்பாக இயங்குகிறது. டபல் ட்ரைவர். .exe பைலாகக் கிடைக்கும் இந்த யூட்டிலிட்டியை கணியில் நிறுவ வேண்டிய அவசியமுமில்லை,

இந்த டபல் ட்ரைவர் மென்பொருளை
http://www.boozet.co.cc/ எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

 

ஸ்கைப்பில் உள்ள contact களை பேக்அப் மற்றும் ரீஸ்டோர் செய்வது எப்படி?

ஸ்கைப்பில் நண்பர்களுடைய முகவரி இருக்கும், அதை நாம் VCF  பார்மெட்டில் சேவ் செய்து வைத்துகொள்ள முடியும். அதனை திரும்பி ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும். 
Contact-களை பேக்அப் செய்ய:
முதலில் ஸ்கைப் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும், அடுத்தாக Contacts > Advanced  என்பதை தேர்வு செய்து  தோன்றும் விண்டோவில் Backup Contact to file என்பதை தேர்ந்தெடுத்து சேமித்து கொள்ளவும்.
 
 Contact-களை ரீஸ்டோர் செய்ய:
அதனை ரீஸ்டோர் செய்ய Contacts > Advanced ல் சென்று Restore Contacts from file என்பதை தேர்வு செய்து Backup செய்த பைலை தேர்வு செய்து ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.
 
                                            அடுத்து பதிவில் சந்திப்போம்.

 

வைரஸ்களை கண்டறிய ஒரு மென்பொருள்..

 நமது நண்பர்களிடம் உள்ள கோப்புகளை சோத்தித்து பார்ப்பதற்காக வாங்கி வருவோம். அப்போது கூடவே வைரசும் வருகிறதா என்ற ஒரு சந்தேகம் நமக்கு இருக்கும். அதனை நம்முடைய கணினியில் உள்ளிட்டு நம்முடைய கணிப்பொறியில் உள்ள ஆண்டிவைரஸ் மூலம் ஸ்கேன் செய்து பார்ப்போம் ஆனால் முடிவு வேறு விதமாக இருக்கும். வைரஸ் இருப்பதாக நம்முடைய ஆண்டிவைரஸ் கூறும். ஆனால் நம்முடைய நண்பருடைய கணினியில் ஸ்கேன் செய்த போது எந்த விதமான வைரசும் இல்லை என அந்த கணினியில் உள்ள ஆண்டிவைரஸ் கூறும். இதில் எது உண்மை என ஆராய்ந்து பார்த்தால் நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டிவைரஸ் கூறியதே உண்மையாக இருக்கும். இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பாடாமல் தவிர்க்க ஒரு ஆண்டிவைரஸ் ஸ்கேனர் உள்ளது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி






இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், ஒப்பன் ஆகும் விண்டோவில் எந்த கோப்பினை சோதிக்க வேண்டுமோ ட்ராக் அன்ட் ட்ராப் செய்யவும். பின் சில வினாடிகளில் உங்களுடைய கோப்பானது சோதிக்கப்பட்டு முடிவு கூறப்படும்.

 
உங்களுடைய விருப்பபடி இந்த மென்பொருளின் செட்டிங்சை மாற்றியமைத்து கொள்ள முடியும்.இந்த மென்பொருளில் 20எம்.பி அளவுடைய கோப்புகளை மட்டுமே சோதிக்க முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் ஏழு (32,64)பிட் களில் இந்த மென்பொருளானது இயங்க கூடியது ஆகும். இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவெனில் பல ஆண்டிவைரஸ்களில் ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்யக்கூடியது ஆகும். இதன் மூலம் எந்த ஆண்டிவைரஸ் சிறப்பானதாய் உள்ளது எனவும் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.