www.manasirsm.com: January 2011
click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Sunday, January 30, 2011

manasirsm@blogspot.com

ணினி வேகமாக துவங்க....

நம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…
வழிமுறைகள்:
1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.
5. கிளிக் "OK", "Apply" & "OK",
6. திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.
7. டபுள் கிளிக் "IDE ATA/ATAPI controllers".
8. "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.
9. "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
10. "Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.
11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க


Computer Device Driver - களைப் பாதுகாக்கDoubleDriver!

altஒரு கணினியை வாங்கும்போது கூடவே ஒரு சீடியும் தருவார்கள். அந்த சீடியில் கணினியில் பொருத்தியுள்ள எல்லா விதமான வன்பொருள்களையும் இயங்க வைக்கும் மென்பொருள்கள் அடங்கியிருக்கும். அதனை (டீவைஸ்) ட்ரைவர் சீடி என்பார்கள்.


alt

டீவைஸ் ட்ரைவர் மென்பொருளானது வன்பொருள் சாதனத்துக்கும் இயங்குதளத்துக்குமிடையில் தொடர்பாடலை உருவாக்கும் ஒரு மத்தியஸ்தராகச் செயற்படுகிறது. ஒவ்வொரு வன்பொருள் சாதனமும் ஒரு டீவைஸ் ட்ரைவர் மென்பொருளைக் கொண்டிருக்கும். . அதன் மூலமாகவே இயங்கு தளம் அந்த சாதனத்தைக் கண்டு கொண்டு அதனை முறையாக இயக்குகிறது.


கணினியில் தேவையான அனைத்து டீவைஸ் ட்ரைவர்க்ளும் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தாலும் ஹாட் டிஸ்கை போமட் செய்து மறுபடி இயங்கு தளத்தை நிறுவ வேண்டிய தேவை ஏற்பட்டால் ஒவ்வொரு சாதனத்துக்குமுரிய டீவைஸ் ட்ரைவரையும் மறுபட்டி நிறுவ வேண்டி இருக்கும். அதனால் எப்போதும் டீவைஸ் ட்ரைவர் சீடியை கவனமாக வைத்திருத்தல் அவசியம்.


ட்ரைவர் சீடி பழுதடைந்து விட்டால் அல்லது அதனைத் தொலைத்து விட்டால் எனன செய்வது? அதேபோன்று பழைய பாவித்த கணினிகளை வாங்கும்போது அனேகமாக அதற்குரிய ட்ரைவர் சிடிக்கள் கிடைப்பதில்லை.

தேவையான டீவைஸ் ட்ரைவரை இணையத்திலிந்து டவுன்லோட் செய்து கொள்ளலாமே என நீங்கள் நினைக்கலாம். இணயத்திலும் இல்லாதபோது ட்ரைவர் சீடியைத் தேடி எங்கே செலவது?

கணினி வன்பொருள் சாதனங்களுக்குத் தேவையான உரிய ட்ரைவர் மென்பொருளைத் தேடிப்பெறுவது எவ்வளவு கடினமான வேலை என்பதை அந்த நிலைமையை எதிர் கொண்டவர்களே அறிவார்கள்.


இது போன்ற ட்ரைவர் மென்பொருள் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருகிறது டபல் ட்ரைவர் (Double Driver) எனும் சிறிய மென்பொருள் கருவி. இந்த டபல் ட்ரைவர் மூலம் உங்கள் கனினியில் நிறுவப்பட்டுள்ள ட்ரைவர் மென்பொருள்கள் அனைத்தையும் தனியாக ஒரு சீடியிலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ பாதுகாப்பாக (Back up) சேமித்துக் கொள்லலாம் ,

டபல் ட்ரைவர் இல்குவான இடை முகப்பைக் கொண்ட ஒரு பயனுள்ள ஒரு இலவ்ச யூட்டிலிட்டி. இதன் மூலம் கணினியில் நிறுவப்பட்டுள்ள ட்ரைவர் மென்பொருளகளைப் பார்வையிடுவதோடு, அவற்றைப் பாதுகாப்பாகவும் சேமிக்கவும், சேமித்ததிலிருந்து மறுபடி ரீஸ்டோர் (restore) செய்யவும் முடிகிறது. .

டபள் ட்ரைவர் யூட்டிலிட்டி கணினியை முழுமையாகப் பரீட்சித்து ட்ரைவர் மென்பொருள்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் எமக்குக் காண்பிக்கிறது. அதனை பேக்கப் செய்து விட்டு தேவையான போது பேக்கப்பிலிருந்து உரிய மென்பொருளை ரீஸ்டோர் செய்து கொள்ளலாம் ;.

விண்டோஸின் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளில் சிறப்பாக இயங்குகிறது. டபல் ட்ரைவர். .exe பைலாகக் கிடைக்கும் இந்த யூட்டிலிட்டியை கணியில் நிறுவ வேண்டிய அவசியமுமில்லை,

இந்த டபல் ட்ரைவர் மென்பொருளை
http://www.boozet.co.cc/ எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

 

ஸ்கைப்பில் உள்ள contact களை பேக்அப் மற்றும் ரீஸ்டோர் செய்வது எப்படி?

ஸ்கைப்பில் நண்பர்களுடைய முகவரி இருக்கும், அதை நாம் VCF  பார்மெட்டில் சேவ் செய்து வைத்துகொள்ள முடியும். அதனை திரும்பி ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும். 
Contact-களை பேக்அப் செய்ய:
முதலில் ஸ்கைப் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும், அடுத்தாக Contacts > Advanced  என்பதை தேர்வு செய்து  தோன்றும் விண்டோவில் Backup Contact to file என்பதை தேர்ந்தெடுத்து சேமித்து கொள்ளவும்.
 
 Contact-களை ரீஸ்டோர் செய்ய:
அதனை ரீஸ்டோர் செய்ய Contacts > Advanced ல் சென்று Restore Contacts from file என்பதை தேர்வு செய்து Backup செய்த பைலை தேர்வு செய்து ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.
 
                                            அடுத்து பதிவில் சந்திப்போம்.

 

வைரஸ்களை கண்டறிய ஒரு மென்பொருள்..

 நமது நண்பர்களிடம் உள்ள கோப்புகளை சோத்தித்து பார்ப்பதற்காக வாங்கி வருவோம். அப்போது கூடவே வைரசும் வருகிறதா என்ற ஒரு சந்தேகம் நமக்கு இருக்கும். அதனை நம்முடைய கணினியில் உள்ளிட்டு நம்முடைய கணிப்பொறியில் உள்ள ஆண்டிவைரஸ் மூலம் ஸ்கேன் செய்து பார்ப்போம் ஆனால் முடிவு வேறு விதமாக இருக்கும். வைரஸ் இருப்பதாக நம்முடைய ஆண்டிவைரஸ் கூறும். ஆனால் நம்முடைய நண்பருடைய கணினியில் ஸ்கேன் செய்த போது எந்த விதமான வைரசும் இல்லை என அந்த கணினியில் உள்ள ஆண்டிவைரஸ் கூறும். இதில் எது உண்மை என ஆராய்ந்து பார்த்தால் நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டிவைரஸ் கூறியதே உண்மையாக இருக்கும். இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பாடாமல் தவிர்க்க ஒரு ஆண்டிவைரஸ் ஸ்கேனர் உள்ளது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி






இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், ஒப்பன் ஆகும் விண்டோவில் எந்த கோப்பினை சோதிக்க வேண்டுமோ ட்ராக் அன்ட் ட்ராப் செய்யவும். பின் சில வினாடிகளில் உங்களுடைய கோப்பானது சோதிக்கப்பட்டு முடிவு கூறப்படும்.

 
உங்களுடைய விருப்பபடி இந்த மென்பொருளின் செட்டிங்சை மாற்றியமைத்து கொள்ள முடியும்.இந்த மென்பொருளில் 20எம்.பி அளவுடைய கோப்புகளை மட்டுமே சோதிக்க முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் ஏழு (32,64)பிட் களில் இந்த மென்பொருளானது இயங்க கூடியது ஆகும். இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவெனில் பல ஆண்டிவைரஸ்களில் ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்யக்கூடியது ஆகும். இதன் மூலம் எந்த ஆண்டிவைரஸ் சிறப்பானதாய் உள்ளது எனவும் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

Saturday, January 29, 2011

manasirsm@blogspot.com

Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி? 

 

நான் Nokia 6120c Phone பயன்படுத்துகிறேன்.அதில் ஒரு நாள் நான் வீரகேசரி தளத்தில் இருந்து செய்தியை வாசித்து கொண்டு இருந்தேன்,எனது நண்பர்(Nibras) என்னிடம் கேட்டார் என்னுடைய Nokia n73 இல் தமிழ் website பெட்டி பெட்டியாக வருகிறது உங்களுடைய phone எப்படி தமிழ் website   பெட்டி இல்லாமல் வருகிறது  என்று கேட்டார்.அதற்கு நான் கூறிய பதில் இதோ......
உங்களுடைய Phone இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும், நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்,உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.
opera for phones

download opera mini 5.1  (271 KB)

download செய்த பிறகு

Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள்

ஆக கடைசியில்  use bitmap fonts for complex scripts  என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு,save செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான்.Opera வை exit  செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள்.தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google search இல்  Eg: (manasirsm) என தேடி பார்க்கவும்.

manasirsm@blogspot.com

உங்களுக்கு தேவையான சீரியல் Number Free

என்னதான் மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்தாலும் அதை நாம் குறைந்தது 15 நாட்கள் அல்லது அதிகமாக 40 நாட்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்,அதற்கு பிறகு அந்த மென்பொருள் Register பன்ன வேண்டும் என ஒரு செய்தியை எமக்கு காட்டும்.அப்படி நாம் பயன்படுத்தும் 15 அல்லது 40 நாட்களில் அதனுடைய பயனை நாம் முழுமையாக அடைந்து கொள்ள முடியாது.


மென்பொருளுடைய சீரியல் நம்பரை வழங்குவதன் மூலம் அந்த மென்பொருளுடைய உண்மையான பயனை நாம் அனுபவிக்க முடியும். இதெல்லம் உண்மைதான் ஆனால் நமக்கு மென்பொருள்தான் இலவசமாக கிடைக்கும் என்று தெரியும் அதற்கான சீரியல் நம்பரும் கிடைப்பதென்பது தெரியாது, குறிப்பிட்ட மென்பொருளுடைய சீரியல் நம்பரை இலவசமாகத்தர சில இணையத்தளங்கள் இருக்கின்றன அவை


01 http://www.youserials.com/
02 http://www.egydown.com/
03 http://serialnumber.in/
04 http://www.serials4u.com/
05 http://www.serialhint.com/
06 http://www.cserial.com/
07 http://www.serials.be/
08 http://www.findserialnumber.com/

நீங்கள் தேடும் மென்பொருளுடைய சீரியல் நம்பர் கிடைக்கா விட்டல் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு பிறகு அங்கு சென்று தேடினீர்கள் என்றால் கிடைக்கும்.

 

வன்தட்டில் (Hard disk) இருந்து டெலிட் செய்யப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்க

தீடிரென நம்மை அறியாமலையே கணினியில் இருந்து கோப்புகளை நீக்கி விடுவோம். அந்த நிலையில் ரீசைக்கிள் பின்னில் தேடினால் நமக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருக்கும் எந்த ஒரு பைலும் இருக்காது. நம்முடைய கணினியில் எங்கு தேடினாலும் கிடைக்காது. அப்போது ஒரு யோசனை தோன்றும் கணினியை ரீஸ்டோர் செய்தால் டாக்குமெண்ட் கிடைக்கும் என்று, இருப்பினும் ஒருசில சூழ்நிலைகளில் டாக்குமெண்ட் கிடைக்காது. இதுபோன்ற நிலையில் இழந்த கோப்பினை எப்படியாவது மீட்டெடுக்க நினைத்து இணையத்தில் உதவி கேட்போம் ஆனால் அந்த நேரத்தில் சரியான வழிமுறைகள் எதுவும் கிடைக்காது, அதுபோன்ற நிலையில் நம்முடைய கோப்புகளை இழக்க நேரிடும் அவ்வாறு இல்லாமல் இழந்த கோப்புகளை மீட்டெடுக்க அருமையான மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


நீங்கள் எந்த ட்ரைவில் இருந்து கோப்பினை டெலிட் செய்தீர்களோ அதனை தேர்வு செய்து Scan என்னும் பட்டியை தேர்வு செய்யவும். நீங்கள் டெலிட் செய்யப்பட்ட கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும். அதில் உங்களுக்கு வேண்டிய கோப்பினை தேர்வு செய்து Undelete என்னும் பட்டியை அழுத்தவும் இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் கோப்பானது ரீஸ்டோர் செய்யப்பட்டிருக்கும்.


இழந்த கோப்பானது மீட்டெடுக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி திரையில் தோன்றுகிறது. இவ்வாறு நாம் இழந்த கோப்புகளை மீட்டெடுத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
                         
                      கீழே உங்கள் கமெண்டை போட்டு விட்டு செல்லவும் .

Hard Disk  விருப்பபடி பிரிக்க - Disk Manager Free லைசன்ஸ் கீயுடன்

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வன்தட்டினை(Hard Disk) ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும் போதே தனித்தனி பகுதியாக பிரித்து வைத்திருப்போம். உதாரணமாக (C: D: E:) என தனித்தனி பகுதியாக வன்தட்டினை பிரித்து வைத்திருப்போம். முதலில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே தனித்தனியாக பிரித்த வன்தட்டினை மீண்டும் மறுசீரமைக்க முடியாது என நம்மில் சிலர் நினைப்போம் ஆனால் இவ்வாறு பிரித்த வன்தட்டினை நம்முடைய விருப்பபடி பிரித்து கொள்ள முடியும். இதற்கு சந்தையில் பல மென்பொருட்கள் கிடைக்கிறன. ஏன் நாம் நிறுவியுள்ள ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் கூடவே இதை நம்மால் செய்ய முடியும்.

            

                  

 

இலவசமாக இணையத்தில் கிடைக்கும் மென்பொருட்கள் நம்பக தன்மையற்றதாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்க வேண்டுமெனில். நாம் மென்பொருளை உரிய உரிமத்துடன் பெற வேண்டும். நாம் இதை பணம் செலுத்தி பெற வேண்டும். இல்லாமல் இலவசமாகவும் பெற முடியும். அப்படிப்பட்ட மென்பொருள்தான் Disk Manager.

மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை தரவிறக்க சுட்டி1

இந்த தளத்திற்கு சென்று உங்களுடைய பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு Get Keycode என்ற பொத்தானை அழுத்தவும். உடனே உங்களுடைய ஈமெயில் முகவரிக்கு பெயர் மற்றும் கீ இரண்டும் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் முதலில் சென்ற தளத்திலேயே மென்பொருளை தரவிறக்கி கொள்ள சுட்டியானது இருக்கும். பின் நீங்கள் மென்பொருளை நிறுவும் போது இந்த பெயர் மற்றும் கீயை உபயோகித்து நிறுவிக்கொள்ள முடியும்.
               இந்த மென்பொருளின் உதவியுடன், ஏற்கனவே பிரிக்க வன் தட்டினை நீங்கள் மீண்டும் டெலிட், பார்மெட்,ரீசைஸ் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் Xp/Vista/7 போன்ற இயங்குதளங்களில் செயல்படக்கூடியது ஆகும். இந்த மென்பொருளானது Fat32,Fat16,Ntfs போன்ற பைல் சிஸ்ட்டங்களை ஆதரிக்க கூடியது ஆகும். ஒரு பார்ட்டிசியனில் உள்ள பைல்களை மற்றொரு பார்ட்டிசியனுக்கு மாற்றிக்கொள்ள முடியும். மேலும் பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் இந்த மென்பொருளில் அடங்கியுள்ளது.
 
Comments write for me

Friday, January 28, 2011

இண்டர்நெட் இல்லாமல் ஜீமெயில் பார்க்கலாம்....

நாம் அனைவரும் ஜீமெயில் கணக்கு வைத்திருப்போம். ஆனால் சிலருக்கு மட்டுமே இணைய வசதி வீட்டு கணினியில் இருக்கும். அதனை விட்டால் ஜீமெயில் பார்க்க பல இடங்களுக்கு செல்ல வேண்டிவரும். அதனை நிவர்தி செய்யும் வகையில் இப்பதிவு உங்களுக்கு வழங்கப்படுகிறது.



முதலில் உங்கள் ஜிமெயில் settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்
http://tools.google.com/gears சென்று இன்ஸ்டால்
செய்யுங்கள்.

பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள்offline - enable கொடுத்து save செய்யவும்.

பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும்.


ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும்.


உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computer க்கு download ஆகதொடங்கும் .


இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம். என்ன நன்பர்களே பதிவு பிடித்திருக்கிறதா? பிடித்திருக்கிறதல்லவா?

Thursday, January 27, 2011

manasirsm@blogspot.com

அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள் - Auto Saver.

நாம் கணினியில் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்போம் முழுவதும் செய்து முடித்துவிட்டு தெரியாமல் Save செய்யாமல் மூடிவிடுவோம். அல்லது நாம் வேலை செய்து கொண்டிருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறால் திடீரென நம் கணினி முடங்கி நிற்கும் அந்த சமயத்தில் நாம் Endtask செய்தோ அல்லது கணினியை Restart செய்தோ திரும்பவும் கணினியை இயங்கும் நிலைக்கு கொண்டு வரும் அப்படி வரும்போது நாம் கணினியில் கடைசியாக செய்த வேலை Save செய்ய மறந்திருப்போம் இது போல சமயங்களில் இந்த மென்பொருள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

 

 


பயன்கள் :
  • இந்த மென்பொருளை உபயோகிப்பதால் நாம் ஒவ்வொரு முறையும் Save செய்ய வேண்டிய அவசியமில்லை. 
  • நாம் எந்த ப்ரோக்ராமில் வேலை பார்த்து கொண்டிருந்தாலும் அது தானாகவே சேமிக்க படும். 
  • இந்த மென்பொருளை Install செய்ய தேவையில்லை, நேரடியாக இயக்கி கொள்ளலாம்.
  • சிறிய அளவே உடையது(768 kb) .தரவிறக்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும். 

உங்களுக்கு வரும் Zip பைலை Extract செய்து பின்னர் வரும் AutoSaver என்ற பைலை நேரடியாக உபயோகிக்கலாம்(Install செய்ய வேண்டியதில்லை). அந்த பைலை இயக்கினால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.  

  • Save Interval:  இந்த விண்டோவில் நீங்கள் உங்கள் உங்கள் பக்கங்களை Save செய்வதற்கான நேர இடைவெளியை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள், இதில் குறைந்தது 15 வினாடிகள் வரை தேர்வு செய்யலாம்.  
  • Run Windows Starts : இது உங்களுக்கு தேவையென்றால் தேர்வு செய்து கொள்ளலாம் இல்லையேல் விட்டு விடலாம். இதை தேர்வு செய்தால் உங்கள் கணினி துவக்கியதும் இது தானாகவே இயங்க ஆரம்பிக்கும்.
  • முடிவில் Hide என்பதை கிளிக் செய்தவுடன் அந்த மென்பொருள் மறைந்து விடும். இயங்க ஆரம்பிக்கும். 
அவ்வளவு தான் இனி நீங்கள் தேர்வு செய்த நேர இடைவெளிக்கு ஒருமுறை நீங்கள் எந்த ப்ரோக்ராமில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அது தானகவே Save செய்து விடும் இனி நீங்கள் Save செய்ய வேண்டிய அவசியமில்லை.

Important Note : நீங்கள் Browsing ஆரம்பிப்பதற்கு முன்னாள் இந்த மென்பொருளை நிறுத்தி விடுங்கள். இல்லையேல் நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வலை பக்கங்களையும் சேமிக்க ஆரம்பிக்கும். அப்புறம் தேவை படும் போது இயக்கி கொள்ளுங்கள். 

Wednesday, January 26, 2011

கணினியில் பென்டிரைவ் தானாக இயங்குவதை தடுக்க.

அனைவரும் உபயோக்கித்து கொண்டிருக்கும் ஒரு சாதனமாக இப்பொழுது பென்டிரைவ் உள்ளது. இது நாம் கணினியில் நுழைத்தவுடன் அது தானாகவே இயங்க ஆரம்பிக்கும் வகையில் உங்கள் கணினியில் செட்டிங்க்ஸ் செய்ய பட்டிருக்கும் இது சிறந்த வசதியாகும். ஒரு சிலருக்கு இது பிடிப்பதில்லை வேறு ஏதேனும் வேலை செய்திருக்கும் போது பென்டிரைவ் நுழைத்தவுடன் அது வேலை செய்ய ஆரம்பிப்பதால் செய்து கொண்டிருக்கும் வேலையில் கவனம் சிதறுகிறது.

இந்த வசதியை நாம் எப்படி செயலியக்க வைப்பது என்று இப்பொழுது காண்போம்.
  • உங்கள் கணினியில் Start - Run -சென்று gpedit.msc என்று கொடுத்து உங்கள் கணினியின் Group policy பகுதிக்கு செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் படத்தில் காட்டியுள்ள இடத்திற்கு சரியாக செல்லுங்கள்.
                       
  • Administrative Templates
  • System
  • Select Turn off Autoplay - என்பதை மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதை போல தேர்வு செய்து கொள்ளுங்கள். 
  • Turn off Autoplay என்பதை இரண்டு முறை க்ளிக் செய்தால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
                
  • இதில் Enable என்பதை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள கட்டத்தில் All drives என்பதை தேர்வு சிது கொள்ளுங்கள்.
  • கீழே உள்ள OK பட்டனை அழுத்தி விடுங்கள். அவ்வளவு தான் இனி நீங்கள் பென்டிரைவ் உங்கள் கணினியில் நுழைத்தவுடன் தானாக இயங்காது. 
  • My Computer சென்று நாம் தான் இயக்க வேண்டும்.

                                                                  டுடே லொள்ளு 
Photobucket
ரொம்ப சூடா இருக்கு கொஞ்சம் ஹீட் குறைங்கப்பா


 

                       

 

உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க.

இணையத்தில் இமெயில் இலவசமாக கிடைக்கின்ற ஒரு வசதியாகும். யார் எத்தனை மெயில் ஐடி வேண்டும் என்றாலும் வைத்துகொள்ளலாம் அதற்கு எந்த அளவும் கிடையாது. பதிவர்களும் ஒன்றிற்கு மேற்ப்பட்ட ஈமெயில் ஐடி வைத்து இருப்பார்கள். நாம் நிறைய தளங்களில் பார்த்து இருப்போம் contact என்று போட்டு விட்டு அதற்கு அருகிலேயே அவர்கள் ஈமெயிலுடன் கூடிய படம் ஒன்று இருக்கும். அது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். அதை எப்படி உருவாக்குவது என்று இங்கே பார்ப்போம்

 

ஜிமெயில் இருந்தே உங்கள் ட்விட்டரை கணக்கை கையாள.

உங்கள் Twitter account உபயோகிக்க இனிமேல் twitter தளத்திற்கு தான் செல்ல வேண்டும் என்று  இல்லை இனிமேல் நீங்கள் உங்களுடைய ஜிமெயிலில் இருந்து கொண்டே உங்களுடைய ட்விட்டர் உபயோகித்து கொள்ளலாம். ட்விட்டர் தளத்தில் உள்ள அனைத்து  வசதிகளையும் நாம் இங்கு ஜிமெயிலில் இருந்து கொண்டே கையாளலாம். இதற்காக நாம் ட்விட்டர் தளத்திற்கு செல்லும் நேரம் நமக்கு மிச்சமாகும்.
  • இதற்க்கு முதலில் உங்கள் ஜிமெயில் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • பின்னர் Settings- Labs - Add any Gadget by URL - Enable - Save Changes- உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
                                     

  • உங்கள் ஜிமெயில் மாற்றிய அமைப்புகளை சேமித்து கொண்டு திரும்பவும் முகப்பு பக்கத்தில் வந்திருக்கும்.
  • இப்பொழுது மறுபடியும் உங்கள் ஜிமெயிலில் Settings பகுதிக்கு செல்லவும்.
  •  அங்கு புதியதாக சேர்ந்து உள்ள Gadget கிளிக் செய்யவும். 
  • அங்கு வரும் விண்டோவில் கீழே உள்ள URL முகவரியை காப்பி செய்து போடவும்.
                                    http://www.twittergadget.com/gadget_gmail.xml
                                 
  • Add பட்டனை அழுத்தியதும் உங்கள் ஜிமெயிலில் Twitter Gadget சேர்ந்திருக்கும். இதை பார்க்க ஜிமெயிலின் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள். 
  • உங்கள் Chat பகுதிக்கு கீழே இந்த Twitter Gadget சேர்ந்திருக்கும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
                                     

  • இதில் உள்ள Sign in with Twitter என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு வரும் விண்டோவில் Allow என்பதை கிளிக் செய்யவும். 
  • அவ்வளவு தான் இனிமேல் உங்கள் ட்விட்டர் அக்கௌன்ட் ஜிமெயிலில் இருந்தே கையாளலாம்.
  • உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
 

                             
  • இதில் Home, Replies, Directs, Favorites போன்ற நான்கு Tab இருக்கும். உங்களுக்கு இன்னும் Tab சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் அதன் அருகில் உள்ள + குறியை க்ளிக் சிது வரும் விண்டோவில் சேர்த்து கொள்ளுங்கள். 
  • இதில் குறிப்பிட்ட விஷயம் என்னவென்றால் உங்களுடைய Twitter gadget ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் தானாகவே Update ஆகி கொள்ளும். இந்த நேர இடைவெளி மாற்ற நினைத்தால் + குறியை அழுத்தவும்.  
  • உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து கொண்டு கீழே உள்ள Save பட்டனை அழுத்தினால் போதும். 

  • இதில் இன்னொரு விஷயம் உங்களுக்கு இந்த gadget சிறியதாக உள்ளது பார்ப்பதற்கு சிரமமாக உள்ளது என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கும் ஒரு வசதியை கொடுத்து உள்ளார்கள். 
  • Fullscreen Popout என்ற வசதி  உள்ளது. இதை கிளிக் செய்தால் உங்களுடைய Gadget ஒரு புதிய விண்டோவில் பெரியதாக ஓபன் ஆகும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள். 
                            

இன்னும் இதில் பல வசதிகள் உள்ளது நண்பர்களே உபயோகித்து பாருங்கள் கட்டாயம் அனிவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். 



                           

 

 

Tuesday, January 25, 2011

உங்கள் லேப்டாப் திருடப்படாமல் பாதுகாக்க ஒரு அறிய மென்பொருள்.

 

       

                         

       

இந்த கணினி உலகில் நாளுக்கு நாள் வசதிகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நம்முடைய வீட்டில் உள்ள Desktop கணினிகள் திருடப்படுவதை விட லேப்டாப் தான் அதிக அல்வாவு திருடப்படுகிறது ஏனென்றால் பாக்கெட்டில் வைத்து செல்லும் அளவிற்கு கூட தற்போது லேப்டாப்கள் வந்துவிட்டன. இதனால் திருடப்படுவதும் நாளுக்கு நாள் வசதியாகி விட்டது. இந்த பிரச்சினைகளை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள் நமக்கு உதவுகிறது.

மென்பொருளின் பயன்கள்:

  • இந்த மென்பொருள் நம் கணினி திருடப்படும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது.
  • இந்த மென்பொருள்  மிகச்சிறிய அளவே உடையது (968kb). 
  • இதில் Theft alarm மட்டுமின்றி Battery Alarm உள்ளது. இது நம் லேப்டாப்பின் பேட்டரி குறைந்தால் நமக்கு தெரிய படுத்துகிறது.
  • இதில் உள்ள மற்றொரு சேவையானது health Alarm. இந்த வசதி நாம் கொடுக்கப்படும் நேர இடைவெளிக்கு ஏற்ப நமக்கு உடலிற்கு ஒய்வு தேவை போன்ற செய்திகளை தரும்.
  • Disk Alarm, Permitter Alarm,  Intention Alarm, Panic alarm போன்றவை இதர பிற வசதிகளாகும். 
  • இவைகள் தேவைபட்டாலும் நீங்கள் Activate செய்து கொள்ளுங்கள்
இன்ஸ்டால் செய்யும் முறை : 

  • இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களக்கு L Alarm57.exe என்ற பைல் வரும் அந்த பைலை இரண்டு முறை கிளிக் செய்யுங்கள்.
  • வரும் விண்டோவில் Run பட்டனை அழுத்துங்கள்.
  • அதற்கு அடுத்து வரும் விண்டோவில் Read Manual என்ற பட்டனை அழுத்தவும். 
  • அதில் இந்த மென்பொருளின் அனைத்து விளக்கங்களும் சிறப்பம்சங்களும் செயல் படுத்தும் முறைகளும் விளக்கமாக கொடுத்து இருப்பார்கள் அதை கண்டிப்பாக பார்த்துகொள்ளவும்.
  • அடுத்து Install என்ற பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் Read Licence Agreement என்பதில் Agree என்று கொடுக்கவும்.
  • அடுத்து உங்களுக்கு Authorization Code கேட்கும். அதில் நீங்கள் எதுவும் கொடுக்காமல் Ok மட்டும் கொடுங்கள்.
  • அவ்வளவு தான் உங்கள் கணினியில் L Alarm இன்ஸ்டால் ஆகி விடும். 
  • உங்கள் கணினியை ஒருமுறை Restart செய்து விடவும்.
பயன் படுத்தும் முறை: 
  • உங்கள் கணினியில் Start - Programs - L Alarm - Options செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.(இதில் நிறைய வசதிகள் உள்ளது அனைத்தையும் விளக்க நேரமில்லாததால் முக்கியமானதை மட்டும் தெரிவிக்கிறேன். முன்பு கூறியது போல் Read manual பகுதிக்கு சென்று அனைத்தையும் பார்த்து கொள்ளவும்).
  • இதில் Sound என்பதை கிளிக் செய்யவும். 
  • அதற்கு பிறகு Browse என்பதை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள .Mp3 (or) .Wav பைலை செலக்ட் செய்யவும்.
  • உங்களுக்கு அது போல பைல்கள் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். Need Sound Files என்ற வசதியை அவர்களே கொடுத்து உள்ளார்கள். அதில் சென்று தரவிறக்கி இங்கு பொருத்துங்கள்.
  • உங்களுக்கு எந்தெந்த எந்தெந்த Alarm தேவை படுகிறதோ அதை பொருத்துங்கள்.
  • கடைசியில் உள்ள Armed என்ற இடத்தில் கண்டிப்பாக ஏதேனும் சவுண்ட் கொடுக்க வேண்டும்.
  • முடிவில் Ok கொடுத்து வெளியில் வந்து விடுங்கள்.
  • இப்பொழுது நீங்கள் கணினியில் இருந்து விலக நேரிட்டால் Windows+L கீயை ஒன்றாக  அழுத்திவிட்டு செல்லவும். 
  • இப்பொழுது யாராவது வந்து இந்த கணினியின் Power கேபிளை பிடுங்கினால் போதும் உடனே உங்கள் கணினி நீங்கள் theft Alarm செலக்ட் செய்த சவுண்டில் அடிக்க துவங்கி விடும்.   

                                   
டுடே லொள்ளு 
Photobucket
யாராவது அந்த Switch கொஞ்சம் ஆப் பண்ணிட்டு போங்களேன்.

ஆன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறிந்து கொள்ள.

நாம் இணையத்தில் உலாவரும் போது நம் கணினியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும். மற்றும் நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது நாம் இணையத்தில் அப்லோட் செய்தாலோ அனைத்தும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல் படும். ஆகவே ஆன்லைனில் நம்  கணினியின் இணைய வேகத்தை எப்படி எளிதாக அறிந்து கொள்ளவது என்று இங்கே காணலாம். இதற்க்கு நிறைய தளங்கள் உள்ளன இன்று நாம் பார்க்க போகு தளம் சிறந்ததாக உள்ளது.
இந்த தளத்திற்கான லிங்க் கீழே உள்ளது. இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். இதில் அங்கு கொடுக்கப்பட்டுள்ள Start Speed Test என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே போதும் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
  • முதலில் கணினியின் டவுன்லோட் செய்யும் வேகம் என்பதை கணக்கிட்டு முடிவை தெரிவிக்கும்.
  • அடுத்து கணினியின் அப்லோட் செய்யும் வேகத்தின் திறனை தெரிவிக்கும். 
  • முடிவின் உங்கள் கணினியின் PING (packet Internet Gropping) அளவை பரிசோதிக்கும்.
  • முடிவின் உங்கள் கணினியின் IP முகவரி மற்றும் நீங்கள் உபயோகிக்கும் பிராட்பேன்டின் நிறுவனத்தின் பெயர் ஆகிய விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கும்.
  • உங்கள் கணினியின் இணைய வேகத்திற்கு ஏற்ப உங்களுக்கு முடிவு வரும். 
  • இதில் உங்கள் முடிவிற்கான லிங்கும் கொடுத்து உள்ளனர்.
  • மேலே உள்ளது என் தளத்திற்கான முடிவு. 
  • இந்த தளத்திற்கு Check Your Internet Speed இந்த லிங்கில் செல்லவும்.

 

செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்ப வேண்டுமா?

தலைப்பை பார்த்தவுடன் என்னடா ஏதோ நம்ம தூத்துக்குடிக்கு அனுப்பறத போல அசால்டா சொல்றானேன்னு நினைக்க வேண்டாம் இது உண்மை தான். அமெரிக்காவின் நாசா அடுத்த ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு செயற்கைகோள் அனுப்ப இருக்கிறார்கள். அதில் உள்ள மைக்ரோசிப்பில் நம்முடைய பெயரையும் இணைத்து அனுப்பவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.
இது வரை இதில் 9 லட்சத்திற்கு மேல் அவர்களின் பெயர்களை இணைத்து உள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 4000 நபர்கள் தங்களின் பெயர்களை இணைத்து உள்ளனர். நாம தான் போக முடியாது நம்முடைய பெயராவது போகட்டுமே.

இதில் நீங்கள் பங்கு கொண்டதற்கு ஆதாரமாக உங்களுக்கு ஒரு எண்ணும் மற்றும் உங்கள் பெயர் பொருந்திய சான்றிதழும் வழங்குகின்றனர்.

  •  சரி நம்ம பேர அனுப்புவோமா அதற்கு முதலில் Send Your Name to Mars இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் நான்கு கட்டங்கள் கொடுக்க பட்டிருக்கும் அதை பூர்த்தி செய்து கீழே உள்ள Submit என்ற அழுத்தவும்.
                           
Submit அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


  அவ்வளவு தான் உங்களுடைய பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்று விட்டது இதற்கு சான்றாக உங்களுக்கு ஒரு சான்றிதழ் தருவார்கள் மேலே வட்டமிட்டுள்ள View and print என்ற லிங்க் அழுத்தி உங்கள் சான்றிதழ் பெற்று கொள்ளுங்கள். 




அவ்வளவு தான் என்ன சந்தோசமா நீங்க போனா என்ன உங்க பெயர் போனா என்ன எல்லாமே ஒண்ணு தான்.(நான் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் இணைத்து விட்டேன்) இதுவும் ஒருவித சந்தோஷம் தானே. 
                                                                               
                                                                    
டுடே லொள்ளு 




போரையே சும்மா போக வேண்டியது தானே என்ன ஏண்டா நோண்டுற?
 

                                                       


 

Monday, January 24, 2011


Youtube ல் ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக தவிர்க்க....

இணையம் என்பது எந்த அளவிற்கு நல்ல செய்திகளை கொடுக்கிறதோ அதற்கு இருமடங்கு கெட்ட செய்தியையும் கொடுக்கிறது. இணையத்தில் வீடியோவை காண பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது இந்த youtube தளம். படிப்பிற்கு சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக்கள் இப்படி பல வகைகளில் வீடியோக்கள் குவிந்து உள்ளன இதில் பல ஆபாச வீடியோக்களும் உள்ளன. 
youtube ல் இந்த ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக தவிர்க்க ஒரு வசதியை youtube தளம் வழங்குகிறது.

  • முதலில் இந்த லிங்கில் www.youtube.com க்ளிக் செய்து youtube தளத்திற்கு செல்லுங்கள்.
  • இப்பொழுது உங்களுக்கு youtube தளம் வந்து இருக்கும். அதில் நீங்கள் கீழ் பகுதிக்கு செல்லுங்கள்.
  • அங்கு Safety mode : Off என்று லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்யுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள். 
  • இந்த லிங்கை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும்.
  • இதில் நீங்கள் On என்பதை க்ளிக் செய்து Save கொடுத்து விடுங்கள்.
 

  • அவ்வளவு தான் you tube ல் ஆபாச வீடியோக்கள் முற்றிலுமாக தவிர்க்க பட்டுவிட்டது.
  • இதை உறுதி செய்ய நீங்கள் ஏதேனும் கொடுத்து தேடி பாருங்கள் No videos found என்ற செய்தியே வரும்.


  • இனி எந்த பயமும் இன்றி நாமும் பிள்ளைகளும் வீடியோக்களை ரசித்து மகிழலாம்.

   
காச கரியாக்குனது போதும்பா விடுங்க 

நண்பர்களே உங்களுக்கு இந்த செயன் முறை   பயன் உள்ளதாக இருக்கும் .
    கமென்ட் மூலம் தெரிவிக்க.